இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சிவப்பரிசி

3/1/2017 2:48:00 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

வேப்பம்பூ மற்றும் சிவப்பரிசி பற்றி இன்று பார்க்கலாம். வேப்பம் பூவானது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி, தொடர் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.கோடைக்காலத்தில் கிடைக்கின்ற வேப்பம் பூவினை சுத்தம் செய்து காயவைத்து கொண்டால் ஒரு வருடம் வரைக்கும் மருந்தாக பயன்படுத்தி கொள்ளலாம். இதனை துவையல் அல்லது ரசமாக எடுத்துக்கொண்டால், உடல் சோர்வு, தளர்வு, செரிமான கோளாறு ஆகியவற்றை நீக்குகிறது. சிறந்த பித்த சமனியாக செயல்பட்டு, அதிக பித்தம் சுரப்பதால் ஏற்படும் அரிப்பு மற்றும் ஈரல் வீக்கத்தை சரிசெய்யும் மருந்தாக உதவுகிறது. தற்போது காய்ந்த வேப்பம்பூவினை பயன்படுத்தி ரசம் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பம்பூ(உலர்ந்தது), புளிகரைசல், மஞ்சள் பொடி, கடுகு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்த கலவை, வரமிளகாய், கொத்தமல்லி, நெய், பெருங்காயப்பொடி, உப்பு.

பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும், பெருங்காயப்பொடி, கடுகு, வரமிளகாய், வேப்பம்பூ ஆகியன சேர்த்து நெய்யில் பொரிய விடவும். இதனுடன் புளி கரைசல், சிறிது மஞ்சள்பொடி, உப்பு, கலவை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அதனுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.  இதனை மாதம் ஒரு முறை பருகி வருவதால் வயிற்று பூச்சி தொல்லைகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். குழந்தைகள் இதனை அருந்துவதால் பூச்சுகள் அழிக்கப்பட்டு, நல்ல சுறுசுறுப்பை கொடுக்கும். வேப்பம் பூ செரிமான கோளாறுகளை நீக்கி, பசியை தூண்டுகிறது. குருதியில் படிகின்ற கொழுப்புகளை அகற்றுகிறது. வயிற்று பூச்சிகளால் மயக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து குழந்தைகளுக்கு நிவாரணம் கொடுக்கிறது. இதேபோல் கைகுத்தல் அரிசிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் சிவப்பு அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக வைட்டமின் ஏ, இ, புரதசத்து, மாவு சத்தும் நிறைந்து காணப்படுகின்றன. அரிதாக நாம் உணவில் பயன்படுத்தும் சிவப்பு அரிசியினை பயன்படுத்தி காப்பரிசி தயாரிப்பது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிவப்பு குத்தல் அரிசி(கழுவி, உலரவைத்தது), தேங்காய் துண்டு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வெல்லப்பாகு, நெய்.கடாயில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அரிசி, வெல்லப்பாகு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வறுத்த தேங்காய் துண்டு மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும். உமி நீக்கிய சிவப்பு குத்தல் அரிசியில் வைட்டமின் இ, புரதசத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் என்ற உப்பு சத்து, மாவு சத்து நிறைந்து உள்ளது. இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. சீதள நோய்கள் சரிசெய்யப்படுகிறது. இதில் தேங்காய் சேர்த்து உண்பதால் குடல் புண்கள் ஆற்றப்படுவதோடு, உள்ளுறுப்புகள் பலமடைகிறது.

மேலும் சில
  • பாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்



  • சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை



  • செரிமானத்தை தூண்டும் மாங்காய்



  • உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்



  • செரிமானத்தை தூண்டும் மருத்துவம்



  • கோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை



  • கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்



  • வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்



  • உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com