இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் இந்தூரில் நாளை தொடக்கம்: ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் ரோகித் அன்ட்கோ

2/28/2023 5:00:34 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

இந்தூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருப்பதால் பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பதிவு  செய்தால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (மார்ச்1) இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்காக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் அதிக பவுன்ஸ் கொண்ட சிவப்பு மண் பிட்சை அமைத்துள்ளது. இந்த பிட்ச் துவக்கத்தில் வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். முந்தைய இரண்டு டெஸ்ட்களைப் போலல்லாமல் பேட்டர்கள் நன்றாக பேட் செய்யவும் இது உதவும். ஆஸ்திரேலிய வீரர்கள் இயல்பாகவே பவுன்ஸ் பிட்ச்களில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இது அவர்களுக்கு இந்தூரில் நன்றாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முழுக்க  முழுக்க ஸ்பின்னர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. இரு அணிகளுமே 3  ஸ்பின்னர்களுடன் களமிறங்கினர்.ஆனால் இந்தூர் மைதான பிட்சில் மிக அதிகமான பவுன்சர் மற்றும் வேகம் இருக்கும் என்பதால் எட்ஜ் கேட்ச்களை பிடித்துவிடலாம்.

3வது நாளின் மதியத்தில் இருந்து தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் உதவும். இதேபோல் பேட்ஸ்மேன்கள் நன்கு நிதானமாக நின்று ஆடினால் நல்ல ஸ்கோர் அடிக்கலாம்.  ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை ஸ்டார் பவுலர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் இருவரையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்தால் மட்டுமே ஸ்கோர் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் இந்திய அணியும் ஒரு ஸ்பின்னரை வெளியேற்றிவிட்டு கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியில் தலைசிறந்த ஸ்பின்னர்களான  ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர்.

பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இதில்  ஒருவரை நீக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை சேர்க்க வேண்டிய  கட்டாயத்தில் ரோஹித் ஷர்மா இருக்கிறார். ஜெய்தேவ் உனத்கட் அல்லது உமேஷ் யாதவை இந்தியா தேர்வு செய்யலாம். அப்படியானால், அக்சர் படேல் வெளியே உட்கார வேண்டியிருக்கும். இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இந்த மைதானத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடைசியாக இந்தியா இங்கு விளையாடிய டெஸ்டின் போது, ​​விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தார். அவர் உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கினார்.

இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா 2 வேகங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளனர், அதே நேரத்தில் இந்தியா முகமதுஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் விளையாடியது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 43ல் ஆஸ்திரேலியாவும் 32ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. நாளை 105வது போட்டி நடைபெற உள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 2 டெஸ்ட் நடந்துள்ளது.

இதில் நியூசிலாந்துக்கு எதிராக 2016ல் இந்தியா 321 ரன்னிலும், 2019ல் வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்திலும் வென்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 முன்னிலை வகிப்பதால் நாளை துவங்கும் டெஸ்டிலும் ரோஹித் அன்ட் கோ வென்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கர் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசேன், நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மாட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன்.

மேலும் சில
  • திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்



  • மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று கிளைமாக்ஸ் முதல் சாம்பியன் மகுடத்திற்கு டெல்லி-மும்பை பலப்பரீட்சை: ரூ.6 கோடி பரிசுத்தொகை யாருக்கு?



  • டி.20 போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கன் அசத்தல் வெற்றி



  • உ.பி.யை வீழ்த்தி பைனலுக்கு தகுதி எங்களிடம் சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது: மும்பை கேப்டன் கவுர் பேட்டி



  • கூடுதலாக 16 அணிகள் சேர்ப்பு: 2026 பிபா உலக கோப்பை கால்பந்தில் 48 அணி பங்கேற்பு



  • லெஜெண்ட்ஸ் லீக் மாஸ்டர்ஸ் டி.20: கம்பீர், உத்தப்பா அதிரடியில் இந்தியா மகாராஜாஸ் முதல் வெற்றி



  • மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ்-ஆர்சிபி இன்று இரவு மோதல்



  • ஷாருக்கானின் மகனை கைது செய்த ஐஆர்எஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது



  • ஐபிஎல் கால்பந்து: 2வது அரையிறுதியில் மோகன்பகான்-ஐதராபாத் மோதல்



  • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கடைசி பந்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி: டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com