எம்பிஏ சாப்ட்வேர்.. அதிகரிக்கும் மவுசு
2/22/2012 1:20:59 PM
மேலாண்மை படிப்புகளில் நிறுவனங்களுக்கு தக்கவாறு பாடப்பிரிவுகள் உருவாகிக்கொண்டே செல்கின்றன. ஒரே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புகளில் 15 பாடப்பிரிவுகள் வரை இருக்கின்றன. தங்களது திறமை, புரிதல் திறனுக்கேற்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில்தான் மாணவர்களின் பொறுப்பு அடங்கியுள் ளது. வேலையளிக்கும் நிறு வனங்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் எம்பிஏ முடித்தவர்களை வரவேற்கின்றன. நிறுவனங்களுக்கு தக்கவாறு ஊதியமும் பல்வேறு படிநிலைகளில் அதிகரிக்கின்றன. தற்போது சாப்ட்வேர் துறை சார்ந்த எம்பிஏ படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகளாவிய அளவிலும் இத்துறை சார்ந்த படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகள் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மேம்பட்ட கணினி வளர்ச்சி மையம், எம்.பி.ஏ., (மென் பொருள் நிறுவன மேலாண்மை) படிப்புக்கு மாண வர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஇ, பிடெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி அல்லது எம்.எஸ்சி (சிஎஸ்/ஐடி/எலக்ட்ரானிக்ஸ்) படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி அல்லது எம்சிஏவில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை குறிப்பிட்ட சில இந்தியன் வங்கிக் கிளை களிலோ, தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று அத்துடன் ரூ.1100க்கான டிடி மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து ஏப். 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை www.cdacnoida.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.