பிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
6/14/2013 2:00:35 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய அளவிலான 15 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது. பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்களுக்கான வலை சேவைகள் பயன்பாடு, கம்பியில்லா வலைப்பணி பாதுகாப்பு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
பிரத்யுஷா கல்லூரி தலைவர் ராஜாராவ் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அதிகாரி பிரத்யுஷா முன்னிலை வகித்தார். முதல்வர் பியூலா தேவமலர் வரவேற்றார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முதன்மை ஆலோசகர் ரங்கராஜன், குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை துவங்கி வைத்தார். விழா மலரையும் வெளியிட்டார். அதை துணை தலைவர் ஹேமா கோபால் பெற்றுக்கொண்டார்.
இன்போசிஸ் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன், பிஎஸ்என்எல், டிஆர்டிஓ, பிரஸ் மீடியா குழுமம், விஎன் டெக்னாலஜிஸ், விஐடி ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசினர். நாடு முழுவதும் இருந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் துளசிபாய் நன்றி கூறினார்.