இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாகாலாந்து, மேகாலயாவில் முதல்வர்கள் பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

3/7/2023 6:44:46 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

கோஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று புதிய அரசின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 ெதாகுதிகளை ஆளும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் முதல்வர் கான்ராட்  சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், பாஜகவின் இரண்டு எம்எம்ஏக்கள்  உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது.

அதையடுத்து கான்ராட் சங்மா இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தேசிய மக்கள் கட்சிக்கு 8, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு 2, பாஜக மற்றும் மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒன்று என அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக இடையேயான கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி  மீண்டும் ஆட்சி கைப்பற்றியது.

நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன், ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேற்கண்ட இரு பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com