இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சட்டீஸ்கரில் நூதன முயற்சி கடனை அடைக்க காரை எரித்த தொழிலதிபர்: இன்சூரன்ஸ் பணத்துக்காக போட்ட திட்டம் பணால்

3/16/2023 6:01:27 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

கான்கர்: சட்டீஸ்கரில் கடனை அடைப்பதற்காகவும், அதன் மூலம் இன்சூரன்ஸ் பணத்தை பெறலாம் என்ற திட்டத்துடன் காரை எரித்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்த ெதாழிலபதிபர் சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சமீரன் சிக்தர் வங்கியிலும், நண்பர்களிடமும் ரூ. 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கொடுத்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் அவருக்கு நெருக்கடி கொடுத்தன. என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த சமீரன் சிக்தர், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார்.

இதற்கான தவணை தொகையை முறையாக கட்டி வந்தார். ஆனால், கடன் நெருக்கடி மேலும் ஏற்பட்டதால் ஆயுள் காப்பீட்டு தவணையையும் செலுத்த முடியவில்லை. இருந்தும் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதால், தான் இறந்ததாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதன்படி கடந்த 1ம் தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.

அங்கு, அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் ஒரு கதையை உருவாக்கினார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார். வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால், அவர்கள் உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர். கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடிவந்தனர்.

தொடர் விசாரணையில், அவரது  கார் சார்மா பகுதியில் இருந்தது. சமீரன் சிக்தர், அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகாபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர், தனது சொந்த ஊருக்கு திரும்பினார். மேலும் தனது கடனை அடைப்பதற்கு இன்சூரன்ஸ் பணத்தை பயன்படுத்த தான் இந்த திட்டத்தை போட்டதாக உண்மையை போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com