இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மீண்டும் நிறைவேற்றம்: விரைவில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

3/23/2023 5:18:05 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. விரைவில் இது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இணைய வழி, சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துதல் சட்ட முன் வடிவை, ஆளுநர் கடந்த 6-3-2023ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இதே சட்ட முன் வடிவை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் இன்று மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மிகவும் கனத்த இதயத்துடன் இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்து 41 பேர் தற்கொலை செய்திருந்தனர். அதில், சென்னையைச் சேர்ந்த வினோத்குமார், 17 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

தமிழக அரசு ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். எனது மரணம்தான் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இதையடுத்துதான், தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அறிவுரை வழங்க, 27-6-2022 அன்று உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, என்னிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அமைச்சரவைகுழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் ஆன் லைன் தடைச் சட்டம் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. அதில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆன் லைன் சூதாட்டத்தால் மாணவர்களின் எழுதும் திறன், படைப்பாற்றல், மதிப்பு திறன், அவர்கள் அடிக்கடி கோபப்படுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

மின் அஞ்சல் மூலமாகவும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதிலும், பெரும்பாலானவர்கள், ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து இணைய தள சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அதே அவசர சட்டத்தை சட்ட முன்வடிவாக தயார் செய்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு 19-10-2022அன்று நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அது 26-10-2022 அன்று அந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் 23-11-2022 அன்று, அந்த சட்ட முன் வடிவில் சில விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டார். அதற்கு 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல், 131 நாட்கள் கழித்து 6-3-2023 அன்று தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து, இந்த சட்டமுன் வடிவை மீண்டும் இந்த சட்டப்பேரவையில் வைத்து நிறைவேற்ற கடந்த 9ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, 2022ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதில், அரசியலில் கருத்து வேறுபாடுகள், கொள்கைகள் மாறுப்பட்டு இருக்கலாம். ஆனால், ஆன் லைன் சூதாட்ட விவகாரத்தில் அப்படி இருக்கக் கூடாது. தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் காப்பது அரசின் கடமையாகும். மக்களை காக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. மத்திய அமைச்சர் கூட ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளார். இனி ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்காமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட முன் வடிவுக்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன் லைன் சூதாட்டம் குறித்த சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசும்போது, 19-10-2022ம் நாளன்று சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் 6-3-2023நாளன்று திருப்பி அனுப்பப்பட்ட 2023ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட முன் வடிவு சட்டமன்றப் பேரவை விதி 53/2022 மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்றார். அதைத் தொடர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவாக வேல்முருகன்(தவாக), ஈஸ்வரன்(கொமதேக), ஜவாஹிருல்லா(மமக), சதன்திருமலைக்குமார்(மதிமுக), நயினார்நாகேந்திரன்(பாஜக) மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் பேசினர். பின்னர் சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மீண்டும் கவர்னருக்கு இந்த வாரத்திலேயே அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com